List Widget

Thursday, April 22, 2010

நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் அல்குல்

அல்குல் என்பது பெண்குறி அல்ல என்பது என் வலுவான வாதம். புற்றரவல்குல் என்றால் அரவம் நுழையும் புற்று போன்ற அல்குல் என்று புருசோத்தம் நாயுடு சொல்லியுள்ளார் என்றார் எனில் அவர் சொல்லிய பொருள் தவறல்லவா?
அல்குல் எனப்து தொப்புளும் அதற்கு கீழே உள்ள அடிவயிறும் என்பதே கருத்து
>> இப்போ சொல்லுங்க அல்குல் என்றால் என்ன என்று? மொத்த அல்குலையும் கொத்தாக >> கொட்டி இருக்கேன்:
> இது ஒருவேளை என்னை நோக்கிக் கேட்கப் பட்டதாக இருந்தால்.
> இச்சொல்லின் மூன்று பொருளையும், இடம், பொருத்தம், இடம்பார்த்துப் பொருள் > காணும் அணுகுமுறை எல்லாவற்றையும் முன்னரேயே சொல்லிவிட்டேன். இதற்கு மேலும் > அல்குலில் மூழ்க என்னால் இயலாது. I haave other important things to do. > இருந்தாலும், இந்தத் திறக்கில் கடைசிக் கடிதமாக இது.
>> பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய >> அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர
> இடை
>> மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின் >> தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ
>> இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன் >> திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி >> ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு >> இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே
> இந்தப் பாடலை மேற்கோள் காட்டித்தான் இச்சொல்லுக்கு இந்த இடத்தில் இடை என்று > பொருளை நிறுவியிருக்கிறேன். என் மடலைப் படித்திருந்தால், இந்த ஐயத்துக்கு > இடமேற்பட்டிருக்காது.
>> புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை >> கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம் >> செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல் >> கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. (
> புற்று அரவு அல்குல் என்பதற்கும் என் கடிதத்தில் விளக்கம் இருக்கிறது. Hour > glass வடிவம் உள்ளது எதுவோ அது. இடை.
>> உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன் >> அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன் >> செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் >> எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே 4.10
> அம்பொன் கலை அல்குல். கலை என்பது என்ன? பொன்னால் ஆன கலை (மேகலை) எங்கே > அணியப்படும்? சிறு குழந்தைகளைத் தவிர, பெரிய, வளர்ந்த பெண்கள் அரசிலை அணிவது > உண்டா?
>> பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையாய்ப் புனைந்துபூந் துகில்சே ரல்குல் >> காமரெழில் விழலுடுத்துக் கலனணியா தங்கங்க ளழகு மாறி >> ஏமருதோ ளென்புதல்வன் யானின்று செலத்தக்க வனந்தான் சேர்தல் >> தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே விசிட்டனே சொல்லீர் நீரே 9.7
> பூந்துகில் அல்குல் என்பதற்கும் என்னுடைய முந்தைய கடிதத்திலேயே விளக்கம் > இருக்கிறது அன்பரே. உங்களுடைய ஐயத்துக்காக இந்தக் கேள்விகளை எழுப்புகிறீர்களா, > அல்லது வம்புக்கு இழுக்கும் உத்தேசமும் உண்டா.
>> பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய் >> பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்,
> அகல் அல்குல், அகலமான, பரவை அல்குல் என்பதற்கும் பொருத்தமான பொருள் ஒன்றுதான் > இருக்க முடியும். A flaring hip.
>> மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில் >> மரங்கொணர்ந்தா னடியணைவீர், அணில்கள்தாவ >> நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ >> நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத் >> தெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச் >> சீராம விண்ணகரே சேர்மி னீரே. 3.4.8
>> கலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக்
> இதுவும் அது.
>> காதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி, >> தலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த >> தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில், >> சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம் >> செழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம், >> மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர் >> வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.9.4
>> உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம் >> உண்டபிரான்ண்டர்கள்முன் கண்டுமகிழ வெய்த, >> கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன் >> குஞ்சிபிடித் தடித்தபிரான் கோயில்,மருங் கெங்கும் >> பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப் >> பலங்கனிகள் தேன்காட்டப் படவரவே ரல்குல், >> அம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர் >> அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. 3.10.3
> அரவு அல்குல், பட அரவு அல்குல் எல்லாம் half of hour glass வடிவம்தான்.
> இதற்குக் கீழே உள்ள எல்லாப் பாடல்களுக்கும் உரிய பொருத்தமான விளக்கங்கள் என் > முந்தைய கடிதத்தில் உள்ளன அன்பரே. தங்களுக்கு விருப்பமான பொருளைக் கொள்வதில் > எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. உங்களுக்கு எது பொருத்தமாகப் படுகிறதோ அதை > ஏற்றுக் கொள்ளவும்.
> இதற்கு மேல் இந்தப் பொருள் குறித்து எந்த எதிர்வினையும் ஆற்ற மாட்டேன்.
> -- > அன்புடன், > ஹரிகி. -- வேந்தன் அரசு சின்சின்னாட்டி (வள்ளுவம் என் சமயம்)

No comments:

Post a Comment